முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு : முத்தரசனல்லுரை ஆட்சி செய்து வந்த முத்தரசன் என்ற மன்னர் சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார் அதனால் அவர் தினமும் அதிகாலையில் முசிறி அருகே உள்ள திரு ஈங்கோய் மலைக்கு சென்று ஈங்கோய் நாதரையும் பின்பு குளித்தலை அருகே உள்ள கடம்பவநேஸ்வரரையும் அதன் பின்பு சுவாமி மலைக்கு சென்று ரத்னக்ரிஸ்வரரையும் வணங்கிய பின்பு தான் தனது அன்றைய வேலைகளை தொடங்குவர், அனால் அவருக்கு வயதான பின்பு தினமும் அதிக தூரம் சென்று இம்மூன்று சிவபெருமானையும் வழிபட முடியவில்லை எனவே இந்த மூன்று கோவில்களிலும் மண் எடுத்து வந்து முத்தரசனல்லுரில் சிவன் கோவிலை கட்டினான், இந்த கோவிலின் சிறப்பே இந்த கோவிலில் திரு ஈங்கோய் மலை ஈங்கோய் நாதர, கடம்பவநேஸ்வரரையும் மற்றும் சுவாமி மலை ரத்னக்ரிஸ்வரர் ஆகிய மூன்று சிவலிங்கங்களும் ஒரே இடத்தில இருப்பதுதான்முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு
முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு
Posted by FIREBAALAJI Wednesday, July 15, 2009 at 10:35 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment