முத்தரசநல்லூர் மாற்றங்கள் 2009 - 2010
Posted by FIREBAALAJI Friday, August 20, 2010 at 10:48 PM
கடந்த ஆண்டில் முத்தரசநல்லூர் இல் பல குறிப்பிட தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன அவை
LATTEST PICS OF MUTHARASANALLUR
Posted by FIREBAALAJI Tuesday, August 18, 2009 at 5:00 AM
முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு
Posted by FIREBAALAJI at 10:35 AM
முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு : முத்தரசனல்லுரை ஆட்சி செய்து வந்த முத்தரசன் என்ற மன்னர் சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தார் அதனால் அவர் தினமும் அதிகாலையில் முசிறி அருகே உள்ள திரு ஈங்கோய் மலைக்கு சென்று ஈங்கோய் நாதரையும் பின்பு குளித்தலை அருகே உள்ள கடம்பவநேஸ்வரரையும் அதன் பின்பு சுவாமி மலைக்கு சென்று ரத்னக்ரிஸ்வரரையும் வணங்கிய பின்பு தான் தனது அன்றைய வேலைகளை தொடங்குவர், அனால் அவருக்கு வயதான பின்பு தினமும் அதிக தூரம் சென்று இம்மூன்று சிவபெருமானையும் வழிபட முடியவில்லை எனவே இந்த மூன்று கோவில்களிலும் மண் எடுத்து வந்து முத்தரசனல்லுரில் சிவன் கோவிலை கட்டினான், இந்த கோவிலின் சிறப்பே இந்த கோவிலில் திரு ஈங்கோய் மலை ஈங்கோய் நாதர, கடம்பவநேஸ்வரரையும் மற்றும் சுவாமி மலை ரத்னக்ரிஸ்வரர் ஆகிய மூன்று சிவலிங்கங்களும் ஒரே இடத்தில இருப்பதுதான்முத்தரசநல்லூர் சிவன் கோவில் வரலாறு
முத்தரசநல்லூர் பயண விவரங்கள்
Posted by FIREBAALAJI at 10:34 AM
முத்தரசநல்லூர் திருச்சில் இருந்து 7k.m தொலைவில் உள்ளது , இதன் பயண தூரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 20 நிமிடம் , திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களும் இயக்க படுகின்றன , கரூர் , ஈரோடு , passanger ரயில்கள் இங்கு நின்று செல்லும் , திருச்சில் இருந்து முதல் ரயில் நிறுத்தமே முத்தரசநல்லூர், பேருந்து மார்க்கமாக வருபவர்கள் ஜீயபுரம் , முக்கொம்பு , பேட்ட வாய் தலை , குளித்தலை ஆகிய பேருந்துகள் மூலமாக முத்தரசநல்லூர் வந்தடையலாம் .சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முத்தரசநல்லூர் வருவதற்கு தற்போதைய பேருந்து கட்டணம் 3 ரூபாய் , ரயில் கட்டணம் 3 ரூபாய் , ஆட்டோ கட்டணம் 70 ரூபாய் ஆகும் முத்தரசநல்லூர் பயண விவரங்கள்